இப்ப நடந்த CSK & MI மேட்சுல CSK-வோட அபாரமான வெற்றி CSK ரசிகர்களை மகிழ்ச்சி பொங்க வச்சிருக்கு. ருத்ராஜ் என்னப்பா பின்னிட்டாரு! ரச்சின் ரவீந்திரா சிக்ஸ் – அய்யோ! அந்த கேரளா பையன் விக்னேஷ் புத்தூர், என்ன மாதிரி ஆடுறாரு… தோனி ஒரு சிக்ஸ் அடிச்சா நல்லா இருந்திருக்கும்ல? அப்படின்னு, அந்த மேட்ச்சை பத்தி Review பண்ண வரல.
செய்திகளத்துல என்னோட முதல் விளையாட்டு தொடர்பான செய்தியைச் சேகரிக்க போனது அன்னைக்கு நடந்த மேட்சுல தான். சேப்பாக்கத்துக்கு ரொம்ப தூரமா நின்னு பார்த்தவன் தான். தூரம்னா, வாலாஜா சாலையிலையோ, அண்ணா சாலையிலோ இருந்து இல்ல… 600 கிலோ மீட்டர் தாண்டி திருநெல்வேலில இருந்து பார்த்தவன். நிறைய மோமென்ட்ஸ் ஷேர் பண்ணிக்க நினைச்சேன், இன்னைக்கு, இது CSK ரசிகர்களுக்கு முக்கியமான இடம். ரசிகர்களால் கொண்டாடப்படும் தோனியின் தலைமை நிலையம். குறிப்பா, அறிமுக வீரர்களுக்கு பூங்கொத்து கொடுத்து அழகாக தொடங்கி வைக்கக்கூடிய இடம். IPL, டெஸ்ட், உலக கோப்பைன்னு – திருவிழா நகரம் சேப்பாக்கம்னு தான் என சொல்ல தோனுது.