Dhoni Exclusive : ருதுராஜ் கேப்டன்ஷிப் முதல் விராட் கோலி வரை.. சுவாரசிய தகவல்களை தந்தஎம்.எஸ். தோனி

சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டது பற்றி தோனி விவரித்துள்ளார். ஐபிஎல் தொடரையொட்டி ஜியோ ஹாட்ஸ்டாருக்கு அளித்த பேட்டியில் சுவாரசியமான பல தகவல்களை பகிர்ந்துள்ளார் தோனி.

“நான் அதிகமாக பிராந்திய மொழிகளில் கமெண்டரி கேட்கவில்லை, ஏனெனில் மொத்தமாக நேரலைப் பார்த்தால், மிகக் குறைவான ரிப்ளேகளே கிடைக்கும். ஆனால், பிஹாரி (போஜ்புரி) கமெண்டரி பழைய காலத்து வானொலி கமெண்டரியை நினைவுபடுத்துகிறது, அதில் கமெண்டேட்டர்கள் மிகவும் ஈடுபாட்டுடன் விளையாட்டை விவரிப்பார்கள். அது எனக்கு மிகவும் நன்றாக தோன்றுகிறது. எவரும் தங்கள் தாய்மொழியில் விளையாட்டைப் பார்க்க விரும்புவார்கள், அதில் ஒரு தனி உணர்வு இருக்கும்.”

Leave a Comment